ஆரணி சிட்டி நியூஸ்

உள்ளூர் தேடல் உலகறிய!

Latest News

Latest News

போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேட்டி:-

போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேட்டி:-
ஆரணி.பிப்.22-
தி.மலை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் சம்பந்தமாக ரகசிய தகவல் கொடுத்தல் முழுமையாக போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்று பாஸ்கர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
     தி.மலை ஆரணி அருகேயுள்ள நெசல் கிராமம் பெட்ரோல் பங்க் அருகில் கடையில் பான்பராக் விற்பனை செய்வதை கண்டறிந்ததைத் தொடர்ந்து அந்த கடையை தி.மலை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்தனர்.
  இதனையடுத்து தி.மலை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
தி.மலை மாவட்டத்தில் காவல், வருவாய் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் தமிழக அரசு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை எங்கு எல்லாம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ரகசிய தகவல் தொடர்ந்து கிடைக்கப்பெறுகிறது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் செயல்பட்ட குழுவானது தடைசெய்யப்பட்ட 200 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கூல்லீப் 23 ஆயிரம் எண்ணிக்கையான சாக்லேட் கைபட்டப்பட்டுள்ளது. மாணவர்களிடையே கூல் லீப் சாக்லேட்டை தடை செய்ய வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் அதனடிப்படையில் நம் மாவட்டத்தில் ஏற்கனவே 137 கடைகளை சீல் வைக்கப்பட்டுள்ளது.  138.வது கடையாக  சீல் வைக்கப்படுகிறது. முதல் தடவையாக 15 நாட்களுக்கு ரூ. 25 ஆயிரமும், இரண்டாவது தடவை 30 நாட்களுக்கு ரூ.50 ஆயிரமும் மூன்றாவது தடவையாக 90 நாட்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தொடர்ந்து தடைச் செய்ய தான் 138 கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது.
செய்தியாளர்கள் கேள்வி:- ஆரணி அடுத்த எஸ்.வி நகரம் கிராமத்தில்  பள்ளி மாணவர்கள் கூல் லீப் சாக்லேட் போன்ற போதைப் பொருட்களால் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ன மாதிரியான துரிதமான நடவடிக்கை…?
மாவட்ட ஆட்சியர் பதில்:- அங்கே ரைட் பண்றோம் அதிகப்படியான கவனம் செலுத்தி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்‌. எல்லாம் பள்ளிகளுக்கும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது.
செய்தியாளர்கள் கேள்வி:- பள்ளிகளுக்கு எது மாதிரியான சர்க்கிள் கொடுத்து இருக்கீங்க…?
மாவட்ட ஆட்சியர் பதில்:- பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாணவர்கள் என்ன மாதிரியான இன்வால்மெண்ட் இருக்கிறார்கள் என்று கண்காணித்து  கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
செய்தியாளர்கள் கேள்வி:-  போதைப் பொருட்கள் சம்பந்தமாக தடைக் குழு ஏதாவது நியமித்து இருக்கிறார்களா…?
மாவட்ட ஆட்சியர் பதில்:-  டீம்  இருக்கிறது  தகவல் தொடர்ந்து வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். பள்ளிகளுக்கு  அருகில் இருக்கும் கடைகளில் மாணவர்கள் தொடர்ந்து எந்த மாதிரியான சாக்லேட் வாங்குகிறார்கள் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.என்று இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
  இப்போட்டியின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் அலுவலர் பாலமுருகன் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கிராமிய காவல் ஆய்வாளர் ராஜங்கம் உள்ளிட்ட போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *