ஆரணி சிட்டி நியூஸ்

உள்ளூர் தேடல் உலகறிய!

Latest News

Latest News

குழந்தை கடத்தல் சம்பவம் சமூக வலைத் தளங்ளில் வைரலாகி பீதி ஏற்படுத்தியதை ஆரணி காவல் துறையினர் மாணவர்களுடையே விழிப்புணர்வு

குழந்தை கடத்தல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பீதி ஏற்படுத்தியதை ஆரணி காவல் துறையினர் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆரணி.மார்ச்.7-
தமிழகத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம்  சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியதை குறித்து   கல்லூரி மாணவர்களிடையே டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் நகர ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக பரவி வரும்  பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கும் நிலையில் அதன்
தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன.  
     குழந்தை கடத்தல் தொடர்பாக பரப்பப்படும் காணொளிகளுக்கும் நமது மாநிலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறான தகவல்களைப் பார்த்து மக்கள் பதற்றமடைய வேண்டாம்’ என்றும் இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும், பொய்ச் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ தமிழக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் தி.மலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்து பணிகளை சீர் செய்து மேற்கொண்டு வரும் காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கு நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வகைகள் வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் நேற்று பிற்பகலில் நகர காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி முன்னிலையில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்து போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வகைகள் வழங்கினார்.
அப்போது கல்லூரிக்கு செல்லுவதற்கு பேருந்துக்காக காத்துக் கொண்டு இருந்த மாணவர்களை  ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் தீடீரென  அழைத்து  அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் குழந்தைகள் கடத்தல் சம்பவம் குறித்து தவறாக பரப்பப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடத் தேவையில்லை எனவும்.
    இது குறித்து விழிப்புணர் ஏற்படுத்திட விதமாக மாணவர்களிடம்  பகிரப்பட்டு மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் மூலம் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் நகர காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி ஆகியோர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,பின்பு கல்லூரி மாணவர்களுக்கு நீர் மோர் வழங்கினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *