தமிழகத்தில் மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாக உள்ளது விவசாயிகள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாக உள்ளது விவசாயிகள் குற்றச்சாட்டு
ஆரணி.மார்ச்.7-
ஆரணியில் மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் நலமா என்பது வேதனையாகவும், சட்டசபை தேர்தலின் போது கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததை செய்யாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து அமுல்படுத்தப்படாத தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில விவசாயி சங்க துணை தலைவர் சதுப்பேரி மூர்த்தி தலைமை வகித்தார்.
விடிவெள்ளி விவசாயிகள் சங்கத்தின் தெள்ளூர் நெடுவேல் கோரிக்கைகளை முழக்கமிட்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த திமுக அரசு விவசாயம் கடன், நகை கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்றும், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற மாட்டோம் எனவும், நூறு நாள் நிதியை 150 நாட்களுக்கு மாற்றி தருவோம், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்த பட்சம் ஆதரவு நிதியை நிர்ணயித்து வழங்குவோம், ஆனால் மத்திய அரசு குறைந்த பட்சம் நெல்லுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.22.45 பைசா தருகிறது. தமிழக அரசு ஒரு கிலோவுக்கு ரூ.0.70 பைசா தான் தருகிறது.மதுவிக்கு படிப்படியாக குறைக்கப்படும் சொன்னார்கள் ஆனால் இன்று தமிழக அரசு நீங்கள் நலமா என்று ஒரு திட்டம் அறிவிக்கிறீர்களே 4 கோடி மக்களின் கடன்கள் ஆடுது. மதுவிலக்கு குறைக்காமல் நீங்கள் யாரைப் பார்த்து கேக்குறீங்க நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்கிறதா என்றீர்கள் வருவாய் துறையே தற்போது முடங்கிப் போய் உள்ளது. இலவச அரிசி போல இலவச தீவனம் வழங்கிடவும், மத்திய அரசு உர மான்யம் ரூ.6 ஆயிரம் போல, தமிழக அரசும் வழங்கினால் விவசாயிகளின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சம் உயரம். ஆனால் சேவை+ தொழில் ஆகிய துறைகள் வருமானத்துடன் வேளாண்துறை வருமானம் இணைத்து சராசரி வருமானம் கணக்கிடுவது தவறான முடிவு என்பதை தெரியப்படுத்திடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் காதில் பூவும், நெற்றியில் நாமமும் இட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வாக்கடை புருஷோத்தமன், வேலப்பாடி குப்பன், வடுகசாத்து செந்தில், தாமோதரன், ஆதனூர் சாம்பசிவம், சதுப்பேரிப்பாளையம் பாபு, அக்ராபாளையம் பூபாலன், மருங்கூர் மருதாசலம், தமிழ்செல்வன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.