ஆரணியில் கோடை கால தொடங்கிய நிலையில் வெயில் தாக்கத்தால் பணிபுரியும் டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர் வழங்கல்
ஆரணியில் கோடை கால தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் பணிபுரியும்
டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர் வழங்கல்
ஆரணி.மார்ச்.7-
ஆரணியில் கோடை கால முன்னிட்டு போக்குவரத்து பணிகளை டிராபிக் போலீஸாருக்கு டிஎஸ்பி ரவிச்சந்திரன் நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வழங்கினார்.
தற்போது கோடைகால வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தல் படி போக்குவரத்து பணிகளை சீர் செய்து மேற்கொண்டு வரும் டிராபிக் போலீஸ்கார்களுக்கு நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வகைகள் வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் நகர காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி முன்னிலையில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி போக்குவரத்து பணிகளை சீர் செய்து மேற்கொண்டு வரும் டிராபிக் போலீஸாருக்கு நீர் மோர் மற்றும் பழ ஜுஸ் வகைகளை வழங்கினார்.
இதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் டிராபிக் போலீஸார் இருந்தனர்.