ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்பு
ஆரணியில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் மக்களிடையே குறைகளை கேட்பு
ஆரணி, பிப்22-.
ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று காலை 9. மணியளவில் தொடங்கி மக்களிடையே குறைகளை கேட்டறிந்த பல்வேறு நலதிட்டங்களையும் நேரில் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வார்கள்.
இத்திட்டத்தின்கீழ் ஆரணியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் நேற்று காலையில் முதல் கட்டமாக முள்ளிப்பட்டு அவுசிங்போர்டு அங்கன்வாடி மையத்திலும்,அரசு தொடக்கப் பள்ளியையும் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் சிற்றுண்டி உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்றும், அனைத்து குழந்தைகளுக்கும் உணவு கிடைக்கிறதா என்றும், மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் திறனாய்வும்,மாணவர்களுக்கு வாசிப்புத்திறன் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து சேவூர் அடையபலம் சாலையிலுள்ள நெசவாளர் வீட்டிற்கு சென்று பட்டு சேலை நெசவு செய்வதை பார்வையிட்டு, நெசவு செய்யும் நெசவாளியிடம் குறைகளை கேட்டறிந்தார். இதற்கு நெசவுத்தொழிலாளி ஆர்.கே.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியரிடம் கூறியது, கைத்தறி பட்டு சேலை டிசைன்களை விசைத்தறியில் செய்யப்படுவதாலல் எங்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் விசைத்தறியில் செய்யப்படும் டிசைன்களை திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு வழங்கும் நலதிட்டங்களை சிக்கலின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உடன் செய்யார் கோட்டாட்சியர் பல்லவிவர்மா, ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யார் கோட்டாட்சியர் பல்லவிவர்மா, ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளின் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். மேலும் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்றும், சரியான சிகிச்சை அளிக்கின்றனரா என்று நோயாளிகளி\டம் கேட்டறிந்தனர். மேலும் ஆட்சியரின் உத்தரவின்பேரில் நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குநர் பவித்ரா ஆரணியில் புதியதாக திறக்கப்பட்ட 1.88 கோடி மதிப்பிலான நூலகத்தை பார்வையிட்டார். பின்னர் பழைய நூலகத்தில் ஆய்வு நடத்தியபோது நூலகர் யாருமின்றி பொதுமக்கள் மட்டுமே இருந்தனர். பின்னர் ஆரணி சைதாப்பேட்டை ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது மேற்கூரை இடிந்து விழும் தருவாயில் உள்ளதை சீரமைக்க உத்தரவிட்டார்.
. ஆரணி கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி 194 முதல்-199 வரை, 6 வாக்கு சாவடி மையங்களும், பதட்டமான வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் முகாம் பார்வையிடப்பட்டது
ஆரணி நகரத்தில் இயங்கி வரும் வரும் வைகை நியாயவிலை கடை செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உயிர் உரம் தயாரித்தல் இடம் ஆய்வு செய்தல்
மக்கும் மட்கா குப்பை தயாரிக்கும் இடம் ஆய்வு செய்தல், ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆய்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரம் 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களும் ஆய்வுப்பணிகளும் மேற்கொண்டனர்.
இதனையடுத்து இன்று காலையில் உழவர் சந்தையில் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் வேலூர் சாலை காமராஜர் சிலை அருகில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, இன்பு அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுடன் காலை சிற்றுண்டி உணவை அறிந்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.