ஆரணியில் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரணி.பிப்.19-
ஆரணியில் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சீர்குலைக்காதே என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர பொருளாளர் ஜாபர் சாதிக் வரவேற்றார்.
சையத் ஷாகுல், அக்கம், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் மாபூப் பாஷா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் முஹம்மத் ஆசாத், மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991.ஐ சீர்குலைக்காதே எனவும், கியான்வாயி, ஹல்த்வானி, மஸ்ஜிதுகள் மீதான தொடரும் அநீதியையும், குடிமக்கள் மீதான உத்தரகாண்ட் காவல் துறையின் வன்முறையை தடுத்து நிறுத்திட உள்ளிட்டவை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராக 30க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ நிர்வாகிகள் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முடிவில் நகர செயலாளர் ஷேக் கவுஸ் நன்றி கூறினார்.