ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆரணி.பிப்.19-
ஆரணியில் வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்து தி.மலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மலை மாவட்டம் ஆரணி தலைமை தபால் நிலையம் எதிரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்குகளை முடக்கிய மோடி – இ.டி யை கண்டித்தும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தி.மலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, தில்லை, எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி, களம்பூர் பேரூராட்சி தலைவர் பழனி, தாமோதரன், வட்டார தலைவர் பந்தாமணி, முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். வினோத்குமார், கிருஷ்ணா, கதிர், தனசேகர் சௌந்தர், சிவ பாண்டியன், சம்பத் பெருமாள், சரவணன், சேதுபதி, வாசுதேவன், சிவ பாண்டியன், குப்புசாமி, சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.