ஆரணி சிட்டி நியூஸ்

உள்ளூர் தேடல் உலகறிய!

Latest News

Latest News

ஆரணியில் நூலக அறிவு சார் மையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைப்பு

ஆரணியில் நூலக அறிவு சார் மையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைப்பு
ஆரணி.பிப்.19-
ஆரணியில் நூலக அறிவுசார் மையத்தை தமிழக பொதுத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.
தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சி அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-23.ம் கீழ் ரூ.1 கோடியே 88 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் நேற்று மாலை 5.00 மணியளவில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி வரவேற்றார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தமிழக பொதுத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு  கலந்து கொண்டு, கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் கீழ் ரூ.1கோடியே 88இலட்சத்து 25ஆயிரம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு ஜீன் மாத17.ந் தேதி தமிழக அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் கீழ் பல்வேறு பகுதிகளில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சி பக்கத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆரணி நகர் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் அரசு பணி தேர்விற்கு  தயாராகும் அனைத்து பயனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் ரூ.10 இலட்சம் மதிப்பில் புத்தகங்கள், இணையதள வசதி தரைத் தளத்தில் கூட்டரங்கில் 10 நபர்கள் பயன்பெறும் வகையில் கணினிகளுடன் கூடிய மேஜை மற்றும் நாற்காலிகள் வசதியும், 40 நபர்கள் அமரும் இருக்கையும், குடிநீர், கழிவறை,மின் இணைப்பு வசதியுடன் 75″ தொடு திரை மற்றும் ப்ரொஜெக்டர் உடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் டைனிங் வசதிகளுடன் ஒரே நேரத்தில் 80 நபர்கள் பயன்பெறும் வகையிலும் இந்நூல்கள் மற்றும் அறிவு சார் மையத்தை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தி.மலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தி.மலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ். தரணி வேந்தன், து.செயலாளர் விண்ணமங்கலம் ஜெயராணி ரவி, வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன், ஒன்றியக் குழு தலைவர்கள் கனிமொழி சுந்தர், பச்சையம்மாள் சீனுவாசன்,  ஒன்றிய செயலாளர்கள் எஸ் எஸ் அன்பழகன்,வக்கீல் சுந்தர், துரைமாமது, மோகன், ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *