ஆரணி சிட்டி நியூஸ்

உள்ளூர் தேடல் உலகறிய!

Latest News

Latest News

ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆரணி.பிப்.16-

ஆரணியில் வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஆரணி வட்டக் கிளை சார்பில் வட்டத் தலைவர்  கோபால்  தலைமையில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரணி வட்டத்தில்  வட்டாட்சியர் வாரிசு, விதவை சான்று உள்ளிட்ட ஆன்லைன்  சான்றுகளை தொடர்ச்சியாக உரிய காரணமின்றி நிராகரித்து, பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த போக்கினை கைவிட கோருதல், புதிய உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் 2021 திட்டத்தில், உறுப்பினர்களிடமிருந்து பங்களிப்புத்  தொகையை  மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்தும், இதுவரை பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக,  NHIS-2021 திட்டத்தில் அடையாள அட்டை வழங்க கோருதல்,பட்டா மாறுதல்கள் முழுவதும்  இணைய வழியில் நடைபெற்றும், தொடர்புடைய மனுக்களின் அச்சு   கோப்புகளை  வழங்க, கிராம நிர்வாக அலுவலர்களை கோருவதை,  கிழக்கு மண்டல துணை வட்டாட்சியர்  கைவிட கோருதல், பிறப்பு-இறப்பு பதிவாளர் என்ற முறையில், கிராமத்தில் நிகழும் பிறப்பு-இறப்புகளை பதிவேட்டில் பதிவு செய்த பின், இணைய வழியில், தங்கள் சொந்த செலவில்  பதிவேற்றம் செய்து வருகிறோம். இதற்கான ஆன்லைன் பதிவுக்கு, அரசால்  வழங்கப்படும் நிதியை, இதுவரை கிராம நிர்வாக அலுவலர்கள் இடம் வழங்கவில்லை.   மேலும், ஆன்லைன் பதிவில் ஏற்படும் சிறிய பிழைகளை சரி செய்ய கூட,  சுகாதாரத்துறை உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. வட்ட நிர்வாகமும் உரிய உதவி செய்வதில்லை. (உதாரணம்) மட்டதாரி கிராம நிர்வாக அலுவலரின், இறப்பு தேதி திருத்த கோரிக்கைக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே இதற்கு உடனடியாக  ஒப்புதல் அளிக்கவும், ஆன்லைன்  செலவின தொகையை வழங்கிட கோருதல், ஆரணி வட்டத்திலுள்ள சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய,  தமிழக அரசின் விலையில்லா வேட்டி- சேலைகள்  இதுவரை வழங்கப்படவில்லை. இதனை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக,  உடனடியாக வழங்க மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதில் மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன், வட்டச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் ராமச்சந்திரன், சிவக்குமார், விநாயகம், ரமேஷ் குமார்,வட்ட அமைப்புச் செயலாளர் இளவரசன், புருஷோத்தமன், சரவணன்,
லோகசுந்தரி உள்பட 30க்கும் மேற்பட்ட விஏஓ.க்கள் பங்கேற்றனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *