ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.
BY .S.YOGANANDH
ஆரணியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம்.
ஆரணி.பிப்.16-ஆரணியில் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நாடு தழுவிய மறியல் போராட்டம் செய்தனர்.
தி.மலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை இருந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் எம்ஜிஆர் சிலை முன்பு மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை நீக்கவும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான வரிகளை குறைத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடவும். பொதுத்துறை நிறுவனங்கள் அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை உடனே நிறுத்திடவும், தேசிய பணமாக்கால் திட்டத்தை ரத்து செய்திடவும். மின்சாரம் ( திருத்த) மசோதா 2020யை திரும்பபெறு, ஸ்மார்ட் மீட்டர் களைப் பொருத்தாதே, நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் படி ஆண்டுக்கு 200 நாட்களுக்கு உயர்த்தி ஊதியத்தை அதிகரிக்கவும், இந்த திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சியிலும் செயல்படுத்திடவும், விவசாயிகள் டெல்லி போராட்டத்தை நிறுத்த மத்திய அரசு அறிவித்த உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்திடவும், போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கி, வழக்குகளையும் திரும்ப பெற்றிட உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளாக பெருமாள், சிரோன்மணி, காசி, அப்பாசாமி, குப்புரங்கன், குமார் , கண்ணன், முள்ளிப்பட்டு ரமேஷ், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 300 மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நகர காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரேசன், மகேந்திரன் உள்ளிட்ட போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.