ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
BY S.YOGANANDH
ஆரணியில் தாசில்தாரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம்
ஆரணி.பிப்.16-
ஆரணியில் தாசில்தார் மஞ்சுளா ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் அவரை மாற்றக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தி.மலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக மஞ்சுளா என்பவர் கடந்த ஆண்டு மார்ச் 6ந் தேதியன்று வட்டாட்சியராக பணி தொடங்கி நாள் முதல் அலுவலகத்தில் நிலைமை வேறு விதமாகவும், ஊழியர்களையும், பொதுமக்களையும் புறக்கணித்து ஆரணி வட்டத்திற்கு நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் செயல்பட்டு வருகிறாராம். வட்டாட்சியர் மஞ்சுளா தவறான போக்கு குறித்து தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்க ஆரணி வட்டக் கிளை சார்பில் பலமுறை நேரில் தாசில்தாருக்கு (மஞ்சுளா) எடுத்துரைத்தும், தன்னை திருத்திக் கொள்வதற்கு பதிலாக ஆரணி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடையே காலம் காலமாக நிலவி வந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்பட்டதோடு, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க ஆரணி வட்டக் கிளைக்கு சுயநலப் போக்கில் செயல்படும் சில ஊழியர்களை துணை கொண்டு வட்டக் கிளை சங்கத்தை பலவீனப்படுத்த முயற்சித்தார்.இதனால் தாசில்தார் மஞ்சுளா மீது பலமுறை கண்டன தீர்மானங்கள் இயற்றியது, தாசில்தார் மஞ்சுளா தனது போக்கில் மாறாததால் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23.01.2024 அன்று நடத்த போக்குவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தாசில்தார் மஞ்சுளா தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உங்களுடைய கோரிக்கைகளையும் என்னுடைய போக்கையும் மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து கூறினாராம். இந்நிலையில் தாசில்தார் மஞ்சுளா தனது வாக்குறுதிகளில் எதையும் இதுவரை நிறைவேற்றாததோடு தொடர்ந்து முன்பைவிட பன்மடங்கு தனது ஊழியர் விரோத போக்கை மற்றும் சங்க விரோத போக்கையும் கடைப்பிடிக்கும் தாசில்தார் மஞ்சுளாவை உடனடியாக பணிமாறுதல் செய்ய வேண்டும் என்று பிப்ரவரி 10.ந் தேதியன்று வட்டக் கிளை சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தாசில்தார் மஞ்சுளாவை இன்னமும் பணி மாறுதல் செய்யப்படாத நிலையில் பணிமாறுதல் செய்யும் வரை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நாள் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டக் கிளை பொருளாளர் வேலுமணி வரவேற்றார்.
தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ரகுபதி எழுச்சியுரையாற்றினார்.
இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பாஸ்கர், மாவட்ட து.தலைவர்கள் மணி, காவேரி, வேணுகோபால், ராஜேந்திரன், சமுகமதுகனி, சிவக்குமரன், சுரேஷ், சங்கீதா, திருமுருகன், சதீஷ்குமார், ராஜா உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
முடிவில் வட்டக் கிளை து.தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.